திருப்பூர் நவ, 22
திருப்பூர் மாநகராட்சி சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ரூ 38.81 மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட பேருந்து நிலையம், ரூ 19.07 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட பல அடுக்கு வாகன நிறுத்தம், ரூ 12.86 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட வாரச்சந்தை, ரூ 4.69 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட மலர்ச்சந்தை ஆகியவற்றை காணொலி காட்சி வாயிலாக சென்னையிலிருந்து தமிழக முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் திறந்துவைத்தார்.
திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சித்தலைவர், துணை மேயர், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், தமிழ்நாடு சட்டமன்ற திட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும் மாநகர்மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
A.மருதமுத்து.
செய்தியாளர்.
திருப்பூர் செய்திப் பிரிவு.