ஈரோடு நவ, 22
தாளவாடி மற்றும் சுற்று வட்டார கிரா மங்களான கொங்கள்ளி, பனகஹள்ளி, தொட்ட காஜனூர் பாரதிபுரம், கெட்டவாடி, தலமலை அருள்வாடி போன்ற 40-க்கும் மேற்பட்ட கிராங்களில் விவசாயிகள் பல்வேறு விவசாய பணிகள் செய்து வருகிறார்கள். மேலும் மலை கிராமங்களில் கத்திரி, வெண்டை, தக்காளி, பீட்ரூட், சிவப்பு முள்ளங்கி, முட்டைகோஸ், சின்னவெங்காயம் , பீன்ஸ் ஆகிய பயிர்களை பயிரிடு வது வழக்கம். இப்பகுதியில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் கத்தரிக்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்த பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கத்திரிக்காய்களை கொள்முதல் செய்ய பெரும்பாலான வியாபாரிகள் முன் வர வில்லை என விவசாயிகள் கூறினர். ஆனால் வியாபாரிகள் கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ.3 முதல் ரூ.4 மட்டுமே விலை கொடுப்பதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். இதனால் கத்திரிக்காய்களை விவசாயிகள் ரோட்டோரம் மற்றும் குப்பையில் கொட்டி வருகிறார்கள்.