தேனி நவ, 21
தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் சட்டமன்ற உறுப்பினரும் திமுகவின் இளைஞர் அணி செயலாளருமாகிய உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு திமுகவின் தேனி வடக்கு மாவட்ட செயலாளர்அணி சார்பாக தென் மாநில அளவிலான இறகு பந்தாட்டபோட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் 10க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன .மேலும் இந்தப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்கத்தமிழ்செல்வன் பங்கேற்று போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு வழங்கி சிறப்பித்தார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில்
தேனி மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் முத்துக்குமார், கிருபாகரன், மூர்த்தி, திமுக நிர்வாகிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.