Month: April 2024

தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு வெப்ப அலை.

புதுடெல்லி ஏப்ரல், 27 தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்று ஐ எம் டி எச்சரித்துள்ளது. மேற்குவங்கம், ஒடிசா மாநிலங்களில் 30ம் தேதி வரை தீவிர அனல் காற்று முதல் அதிதீவிர அனல் காற்று வரை வீசும்…

மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி.

சென்னை ஏப்ரல், 27 அனைவரும் கல்வி உரிமை சட்டத்தின் படி 6,7,8 ம் வகுப்பில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் கட்டாய தேர்ச்சி அளிக்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஏழாம் வகுப்புகளுக்கு மூன்றாம் பருவத் தேர்வு மதிப்பெண் கிரேடுகளை பதிவுமாறும், எட்டாம் வகுப்புக்கு…

பெரம்பலூரில் தர்பூசணி பழங்கள் விற்பனை மும்முரம்

பெரம்பலூர் ஏப்ரல், 27 பெரம்பலூர் மாவட்டத்தில் வரலாறு காணாதபடிக்கு நடப்பாண்டு வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து, கடந்த மார்ச் மாதம் தொடங்கி தினமும் வெப்பத்தின் அளவு சதமடித்து 100 டிகிரிக்கு குறையாமல் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள…

புராதன சின்னங்களை விளக்கும் வகையில் ₹5 கோடி மதிப்பில் 3டி அனிமேஷன் திட்டம்.

மாமல்லபுரம், ஏப்ரல், 26 மாமல்லபுரத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில், 3டி அனிமேஷன் திட்டத்துக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் ₹5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் மேப்பிங் திட்டம் அமைய உள்ள இடத்தினை சுற்றுலாத்துறை ஆணையர் சமயமூர்த்தி…

வெளிமாநில தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் தேர்தல் விடுமுறை.

திருவள்ளூர், ஏப்ரல், 26 வெளிமாநில தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால் அந்தந்த கட்டுப்பாட்டு அறை அலுவலர்களிடம் புகார் தெரிவிக்கலாம் என்று தொழிலக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர்கள் ஜெயக்குமார், கார்த்திகேயன், பாலு…

நீர் நிலைகள் குளத்தில் நீர் வற்றியதால் மீன்கள் உயிரிழப்பு.

கோவை ஏப்ரல், 26 கோவையில் வெயில் கொளுத்தி வருவதால் ஆறு, குளம், கிணறு, போர்வெல், குட்டைகளில் நீரின் அளவு வெகுவாக குறைந்து வருகிறது.நிலத்தடி நீர்மட்டம் கிடு,கிடுவென குறைந்து வருவதால் மரம்,செடி,கொடிகள் காய்ந்து காட்சி அளிக்கின்றன. மேலும் ஆழ்குழாய் கிணறுகளிலும் போதிய நீர்…

தனியார் அரிசி ஆலையில் ரேசன் அரிசி பதுக்கல்.

கடலூர் ஏப்ரல், 26 கடலூர் மாவட்டம் திண்டிவனம் தனியார் ரைஸ்மில்லில் ரேஷன் அரிசி 4 டன் அளவில் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவு காவல் துறையினர், ரைஸ்மில்லை சோதனை செய்து…

கல்வராயன் மலையில் கிடுகிடுவென காட்டுத் தீ பரவல்.

கள்ளக்குறிச்சி ஏப்ரல், 26 கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வராயன் மலை, 30 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது. இந்த கல்வராயன் மலையில் பல்வேறு வகையான விலை உயர்ந்த மரங்களும் பல்வேறு வகையான மூலிகை செடிகளும் உள்ளன. இந்நிலையில் வெள்ளிமலையில்…

குடைமிளகாயில் உள்ள சத்துக்கள்:-

ஏப்ரல், 26 குடைமிளகாயில் வைட்டமின் ‘சி’ சத்து அதிகமுள்ளது. மேலு வைட்டமின் ஏ, ஈ, பி6 போன்ற சத்துக்கள் ஆரோக்கியமான தேகத்தைக் கொடுக்கும். இவற்றை சமைக்கும்போது தண்ணீர் அதிகம் சேர்க்கக்கூடாது. அதிகச்சூட்டில் சமைக்கக் கூடாது. செப்புப் பாத்திரத்தில் சமைக்கக்கூடாது. உடல் எடையைக்…

ஊட்டியில் குப்பைகளை சேகரிக்க 7 மினி லாரிகள்.

நீலகிரி ஏப்ரல், 26 ஊட்டி நகராட்சியில் குப்பைகள் சேகரிப்பதற்காக 7 மினி லாரிகள் வாங்கப்பட்டுள்ளன. ஊட்டி நகராட்சியில் மொத்தமுள்ள 36 வார்டுகளில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இதுதவிர, நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.…