Spread the love

கள்ளக்குறிச்சி ஏப்ரல், 26

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வராயன் மலை, 30 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது. இந்த கல்வராயன் மலையில் பல்வேறு வகையான விலை உயர்ந்த மரங்களும் பல்வேறு வகையான மூலிகை செடிகளும் உள்ளன.

இந்நிலையில் வெள்ளிமலையில் உள்ள தாலுகா அலுவலகம் பின்புறம் மலையில் திடீரென நேற்று மாலை காட்டுத் தீ கிடுகிடுவென வேகமாக பரவியது. இதனால் சுமார் ஒரு அரை ஏக்கர் பரப்பளவிலான வனப்பகுதியில் இருந்த மரங்கள் தீயில் கருகின. இதை பார்த்த பொதுமக்கள் இது பற்றி வெள்ளிமலை வனச்சரக அலுவலர் தமிழ்ச்செல்வனுக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்நிலையில் வனத்துறை அதிகாரிகள், வனக்காப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அந்தப் பகுதியில் எந்தவிதமான அசம்பாவிதமும் நடக்கவில்லை என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *