Month: October 2022

துபாய் ஈமான் அமைப்பின் சேவைகளை பாராட்டிய துபாய் சமூக நலத்துறை தலைமை நிர்வாக இயக்குனர் டாக்டர் உமர்.

துபாய் அக், 25 ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் அரசின் சமூக நலத்துறை ஆணையத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் மேதகு டாக்டர் உமர் முத்தண்ணாவை மரியாதை நிமித்தமாக துபாயில் பல்வேறு சமூக பணிகளை செய்துவரும் தமிழ் சமூக அமைப்பான ஈமான்…

சுங்கச்சாவடியில் கட்டணம் வசூல் செய்ய ஊழியர்கள் இல்லாததால் இலவசமாக பயணித்த வாகன ஓட்டிகள்.

கள்ளக்குறிச்சி அக், 25 உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் போராட்டம் தொடர்ந்து நேற்று 22வது நாளாக நீடித்தது. இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து தற்போது பணிபுரிந்து வரும் ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் சுங்கச்சாவடியில் வானங்களுக்கு கட்டணம் வசூல் செய்யும்…

தோட்டத்திற்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்.

கோயம்புத்தூர் அக், 25 துடியலூர் அருகே உள்ள பன்னிமடை திப்பனூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 2 காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்தன. இதனை கண்ட பொதுமக்கள் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து அங்கு வந்த பொதுமக்களுடன் சேர்ந்து பட்டாசு…

மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி குப்பம் மீனவர் பகுதியில் கடலரிப்பு.

செங்கல்பட்டு அக், 25 மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி குப்பம் மீனவர் பகுதியில் கடலரிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் கடற்கரையோர பகுதிகளில் உள்ள வீடுகள், சமுதாயக்கூடம், படகுகள் சேதமடைந்து வருகின்றன. எனவே கடல் அரிப்பால் பாதிப்பு ஏற்படாத வகையில் அங்கு தூண்டில் வளைவு…

திடீரென முடங்கிய வாட்ஸ் அப்.!

சென்னை அக், 25 மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனம். அவ்வப்போது ஏற்படும் தொழில்நுட்ப கோளாறுகளால் முடங்கி விடுகிறது. தற்போது உலகம் முழுக்க வாட்ஸ் அப் சர்வர் சரியாக வேலை செய்யவில்லை என நெட்டிசன்கள் மற்றும் வாட்ஸ்அப் பயனர்கள் கூறுகின்றனர். சிக்கலை ஒப்புக்கொண்ட…

தேனி-போடி இடையே ரயில் பாதை அமைக்கும் பணி.

தேனி அக், 25 மதுரை-போடி இடையே அகல ரெயில் பாதை அமைக்கும் திட்டம் நடந்து வருகிறது. இதில், மதுரை-தேனி இடையே ரயில் பாதை அமைக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது அந்த பாதையில் தேனி-மதுரை இடையே இருமார்க்கமாக தினமும் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.…

முசிறியில் புதிய நகராட்சி கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா.

திருச்சி அக், 25 முசிறி நகராட்சி புதிய அலுவலக கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமை தாங்கினார். சட்ட மன்ற உறுப்பினர்கள் காடுவெட்டி தியாகராஜன், கதிரவன், ஸ்டாலின் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.…

இடிந்துவிழும் நிலையில் சுகாதார நிலைய கட்டிடம்.

திருப்பத்தூர் அக், 25 நாட்டறம்பள்ளியில் இருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் புதுப்பேட்டை என்ற இடத்தில் கல்நார்சம்பட்டி அரசு துணை சுகாதார நிலையம் உள்ளது. இந்தக் கட்டிடம் மிகவும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதன் அருகே குடியிருப்புகளும், கடைகளும் உள்ளன.…

களக்காடு அருகே வனவிலங்குகள் வேட்டையில் மேலும் 20 பேருக்கு தொடர்பு. கைதானவரிடம் நடத்திய விசாரணையில் தகவல்.

நெல்லை அக், 25 நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கீழவடகரை கிராமத்தில் ஒரு தோட்டத்தில் மின்சார வேலியில் சிக்கி கரடி உயிரிழந்தது. இது தொடர்பாக வனத்துறையினர் நடத்திய விசாரணையில் மர்ம கும்பல் மின்சார வேலி அமைத்து கடமான், பன்றி, முயல்,…

மாரண்டஅள்ளி அருகே கால்நடைகளுக்கு மருத்துவ முகாம்.

தர்மபுரி அக், 25 மாரண்டஅள்ளி அருகே உள்ள சி.எம்.புதூர் கிராமத்தில் கால்நடைகள் பெரியம்மை நோயால் பாதிக்கப்பட்டு வந்தன. இதையடுத்து கால்நடைகளுக்கு பெரியம்மை நோய்க்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இதற்கு திமுக. மாவட்ட கலை மற்றும் இலக்கிய பகுத்தறிவு அணி துணை…