துபாய் அக், 25
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் அரசின் சமூக நலத்துறை ஆணையத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் மேதகு டாக்டர் உமர் முத்தண்ணாவை மரியாதை நிமித்தமாக துபாயில் பல்வேறு சமூக பணிகளை செய்துவரும் தமிழ் சமூக அமைப்பான ஈமான் கலாச்சார மையத்தின் சார்பாக அமைப்பின் தலைவர் பி.எஸ்.எம் ஹபிபுல்லா கான் தலைமையில், பொருளாளர் பிளாக் துலிப் எஹியா, பொதுச் செயலாளர் ஹமீது யாசின், ஒருங்கிணைப்புச் செயலாளர் நஜீம் மரிக்கா உள்ளிட்டோர் சந்தித்தனர்.
இச்சந்திப்பின்போது பல்வேறு சமூக நலப்பணிகள் மற்றும் சேவைகள் குறித்தும் குறிப்பாக எதிர்பாராத விதமாக உயிரிழக்கும் இந்திய தொழிலாளர்களின் உடல்களை துபாயில் உள்ள இந்திய தூதரகத்துடன் இணைந்து ஊருக்கு அனுப்புவது, நோன்பு மாதத்தில் லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு உணவுப் பொருட்கள் விநியோகம் செய்தது, கொரோனா காலத்தில் பல்வேறு உதவி சமூக பணிகளை மேற்கொண்டது உள்ளிட்ட பல்வேறு பணிகளை கேட்டறிந்த சமூக நலத்துறை ஆணையத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் மேதகு டாக்டர் உமர் முத்தண்ணா ஈமான் அமைப்பின் சமூக பணிகளை வெகுவாக பாராட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மேலும் இந்த சந்திப்பின்போது சமூக நலத்துறையின் மேலாளர் பழனி பாபு உடனிருந்தார்.
நஜீம் மரைக்கா.
முதன்மை செய்தியாளர்.
அமீரக செய்திப் பிரிவு.