Month: September 2022

குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்.

அரியலூர் செப், 7 தா.பழூர் அரசு மேல்நிலை பள்ளியில் ஒன்றிய அளவிலான குறுவட்ட போட்டிகள் நடைபெற்றது. தா.பழூர் ஒன்றியத்தை சேர்ந்த சாத்தம்பாடி, குணமங்கலம், கோவிந்தபுத்தூர், முத்துவாஞ்சேரி, ஸ்ரீபுரந்தான், காரைக்குறிச்சி, சுத்தமல்லி,கோடாலிகருப்பூர், சிலால் உள்ளிட்ட 11 பள்ளிகளில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் போட்டியில்…

மெரினா கடற்கரை காந்தி சிலை இடமாற்றம்.

சென்னை செப், 7 சென்னை மெரினா கடற்கரையின்முக்கிய அடையாளமாக திகழும் காந்தி சிலை கடந்த 1959ம் ஆண்டு தேபி பிரசாத் ராய் சவுத்ரி என்பவரால் செதுக்கப்பட்டு, அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு, முதலமைச்சர் காமராஜ் முன்னிலையில் 12 அடி வெண்கல காந்தி…

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு.

சென்னை செப், 7 சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவு தாமதம் ஆனதால், நீட் தேர்வு முடிவும் காலதாமதம் ஆனது. மாணவர்கள் இணையதளம் மூலம் தேர்வு முடிவை பதிவிறக்கம் செய்யலாம்.எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட்நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன.…

இங்கிலாந்தின் புதிய உள்துறை அமைச்சராக இந்திய வம்சாவளி பெண் நியமனம்

லண்டன் செப், 7 இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து போரிஸ் ஜான்சன் ஆட்சியின் போது உள்துறை அமைச்சராக பணியாற்றிவந்த இந்தியாவை பூர்வீகமாக கொண்ட பிரித்தி படேல் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். இந்நிலையில்,…

மக்கள் குறைதீர்க்கும் மனுநாள் முகாம்

நெல்லை செப், 6 திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் மேயர் பி.எம்.சரவணன் தலைமையில், துணைமேயர் ராஜூ முன்னிலையில் மக்கள் குறைதீர்க்கும் மனுநாள் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் பாளையங்கோட்டையை சார்ந்த அப்துல்காதர் என்பவர் அளித்த மனுவில் தங்கள் பகுதியில் குடிநீருடன் சாக்கடை…

முதலமைச்சர் பங்கேற்கும் விழா மைதானத்தில் பணிகள் தீவிரம். கூடுதல் தலைமை இயக்குனர் ஆய்வு

நெல்லை செப், 6 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் நாளை மறுநாள் வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார். இதற்காக அவர் விமானம் மூலம்…

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்.

நெல்லை செப், 6 நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள நவ்வலடியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ஜெகதீஷ் தலைமை தாங்கினார். மாவட்ட தூய்மை பாரத திட்ட ஒருங்கிணைப்பாளர் கோவிந்தன், ராதாபுரம் வட்டார கிராமபுற வளர்ச்சி…

நெல்லை சந்திப்பில் குழாய் உடைப்பால் சாலையில் ஆறு போல் ஓடிய குடிநீர்

நெல்லை செப், 6 நெல்லை மாநகர பகுதியில் கூட்டுகுடிநீர் திட்டப்பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. இதனால் மண்டல வாரியாக அரியநாயகிபுரம் கூட்டு குடிநீரை விநியோகம் செய்வதற்கு முன்னோட்டம் நடைபெற்று வருகிறது. அப்போது ஒரு சில இடங்களில் திடீரென குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு…

பாளை ஐ.ஐ.பி. லெட்சுமிராமன் குளோபல் பள்ளியில் ஆசிரியர் தின விழா.

நெல்லை செப், 6 நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஐ.ஐ.பி. லெட்சுமிராமன் குளோபல் சி.பி.எஸ்.இ. பள்ளியில் ஆசிரியர் தின விழா கலையரங்கில் நடந்தது. ஐ.ஐ.பி. பள்ளியின் தாளாளர் அனந்தராமன் தலைமை தாங்கினார். இவ்விழாவிற்கு மேலப்பாளையம் அல் மதினா சி.பி.எஸ்.இ. பள்ளியின் தாளாளர் எம்.கே.எம்.கபீர்…

எஸ்.பி.அலுவலகம் எதிர்புற சாலையில் மின்கம்பம் மாற்றி அமைக்கும் பணி.

நெல்லை செப், 6 நெல்லை நகர்ப்புறக் கோட்டத்தில் சமாதானபுரம் பிரிவுக்குட்பட்ட எஸ்.பி. அலுவலகம் எதிர்புறம் உள்ள சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி அப்பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மின் கம்பத்தினை அகற்ற நெல்லை மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள் விடுத்ததையடுத்து…