Author: Mansoor_vbns

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

திருவள்ளூர் செப், 22 திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பல்வேறு அரசு அலுவலகங்களில் தீர்வு செய்யப்படாமல், நிலுவையில் உள்ள ஓய்வூதிய மற்றும் ஓய்வு கால பயன்கள் குறித்த ஓய்வூதியர்களின் முறையீட்டு மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் ஆலோசனை…

வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட திடீர் ஆய்வு.

திருப்பத்தூர் செப், 22 வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் மற்றும் கோப்புகளை மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா திடீர் ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின்னர் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது,வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறையின் சார்பில் இ-அடங்கல், இ-பட்டா, இலவச…

நாசரேத்திலுள்ள மனநலம் பாதிக்கப்பட்டோர் இல்லத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

தூத்துக்குடி செப், 22 நாசரேத்தில் வகுத்தான்குப்பம் ரோட்டிலுள்ள நல்ல சமாரியன் மனநலம் பாதிக்கப்பட்டோர் பாதுகாப்பு இல்லத்தில் 50 பேர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த மனநலம் பாதிக்கப்பட்டோர் பாதுகாப்பு இல்லத்தை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார். இந்த இல்லம் முறையாக…

பெரியகுளத்தில் சாலையில் கிடந்த 10 பவுன் சங்கிலியை காவல் துறையில் ஒப்படைத்த தொழிலாளி.

தேனி செப், 22 பெரியகுளம் வடகரை, சுப்பிரமணிய சாவடி தெருவை சேர்ந்தவர் முத்துப்பாண்டி கூலித்தொழிலாளி. இவர் நேற்று இரவு வடகரை தேரடி தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது காலில் பர்ஸ் ஒன்று தட்டுப்பட்டது. இதையடுத்து முத்துப்பாண்டி அந்த பர்சை…

மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம்.

தஞ்சாவூர் செப், 22 கும்பகோணத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது. இதுகுறித்து கும்பகோணம் கோட்டாட்சியர் லதா வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நாளை காலை 11 மணிக்கு மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. கூட்டத்தில்…

பாரதியஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா காரைக்குடி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு.

சிவகங்கை செப், 22 பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா விமானத்தில் இன்று மதுரை வந்தார். விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் காரைக்குடிக்கு புறப்பட்டார். மாலை 3.30 மணிக்கு காரைக்குடி எம்.ஏ.எம். மகாலில் நடைபெறும் பாரதிய ஜனதா மாநில,…

வேளாண்மை-உழவர் நலத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகள் குறித்து ஆலோசனை.

கரூர் செப், 22 மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டத்தில் நேற்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகள் குறித்த ஆலோசனை நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தலைமை தாங்கி பேசுகையில், வேளாண்மைத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் உணவு…

நெல்லை மருத்துவமனையில் முடிவுற்ற கட்டிடங்கள் திறப்பு விழா.

நெல்லை செப், 22 நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதாரநிலையங்களில் கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டிடங்கள் திறந்து வைப்பதற்காக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நாளை வருகிறார். மேலும் விமானம் மூலம் நாளை காலை தூத்துக்குடி வரும்…

மிஸ் இந்தியா அழகி போட்டிக்கு குமரி மாவட்டத்தை சேர்ந்த மாணவி தேர்வு.

கன்னியாகுமரி செப், 22 மிஸ் இந்தியா அழகிப்போட்டி இந்திய அளவில் நடத்தப்படுவது வழக்கம். அந்த போட்டியில் கலந்து கொள்வதற்கான மாநில அளவிலான அழகி போட்டி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்தது. இதில் இந்தியா முழுவதும் இருந்து 750க்கும் மேற்பட்ட இளம் பெண்கள்…

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆக்கிரமிப்பு பஞ்சமி நிலத்தை மீட்க கோரி ஆர்ப்பாட்டம்.

செங்கல்பட்டு செப், 22 செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சரவம்பாக்கம் பகுதியில் 450 ஏக்கர் பஞ்சமி நிலம் உள்ளது. இந்த நிலத்தை அதே பகுதியைச் சேர்ந்த தனிநபர்கள் ஆக்கிரமித்து பயன்படுத்தி வருவதாகவும், இதனை மீட்க கோரியும் பொதுமக்கள் சார்பில் பல்வேறு…