திருவண்ணாமலை நவ, 19
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதியிக்கு உட்பட ஜவ்வாதுமலை அமைந்துள்ளது இம்ம லையை சுற்றுலாத்தலமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பினை அடுத்து, அமைச்சர் எ.வ. வேலு ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் விஐபி, விவிஐபி மற்றும் சமையலறையுடன் கூடிய தங்கும் விடுதி சுற்றுலாப் பயணிகளின் வசதிக்கேற்ப கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்தார்.
அதனடிப்படையில் தற்போது இப்பணிகள் தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை எம்பி அண்ணாதுரை, கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சரவணன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.