திருவண்ணாமலை நவ, 17
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. திருவண்ணாமலை சுற்றிலும் 13 தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. தற்போது 9 ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. கூடுதலாக 19 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. 2,692 சிறப்பு பேருந்துகள் 6,431 நடை இயக்கப்படும். கிரிவலப் பாதையில் 15 மருத்துவ குழுக்கள், கோவில் வளாகத்தில் 3 குழுக்கள் அமைக்கப்படுகிறது.
மேலும் ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் வைக்கப்பட உள்ளன. தீபத் திருவிழாவிற்கு ஒரு காவல்துறைத் தலைவர் தலைமையில் 5 காவல் தலைமை இயக்குனர்கள், 20-க்கும் மேற்பட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோர் தலைமையில் 12 ஆயிரத்து 97 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட உள்ளனர். மேலும் ஆங்காங்கே 26 தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. 600-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபட உள்ளனர். கோவில், மாடவீதிகள் மற்றும் கிரிவலப் பாதையில் 500 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகிறது.