ராமநாதபுரம் நவ, 19
ராமநாதபுரம் அரசின் தாட்கோ நிறுவனம் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் பழங்குடியினருக்கு தொழில் தொடங்க மானியம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இம்மானியத்தை பெற குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு உள்ள 18 வயது முதல் 65 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம். இதில் தேர்வு குழு மூலம் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ் தெரிவித்துள்ளார். எனவே தகுதியுள்ள பயனாளிகள் விண்ணப்பித்து பயனடைய மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.