ராமநாதபுரம் நவ, 17
பெங்களூருவில் நடந்த சர்வதேச குறும்பட விழாவில் பாஞ்சாலி குறும்படம் தேர்வாகி முதலிடம் பிடித்தது. இதில் ராமநாதபுரம் திருப்புல்லாணி அரசு பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர் தீபக் நடித்திருந்தார். ஆடு மேய்க்கும் தாத்தா தன் பேரனை ஆடு மேய்க்க விடாமல் படிக்க வைப்பதே பாஞ்சாலி படத்தின் கதை. இந்நிலையில் இயக்குனர் சுப்பிரமணிய பாரதி தனது குழுவினருடன் திருப்புல்லாணி வந்து மாணவர் தீபக்கை பாராட்டினார். உடன் பள்ளி தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் என அனைவரும் தீபக்கை பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.