சென்னை நவ, 19
பண்டிகை காலத்தை முன்னிட்டு கடந்த அக்டோபரில் ₹76,000 கோடிக்கு மின்னணு வர்த்தக நிறுவனங்கள் பொருட்களை விற்பனை செய்துள்ளதாக டெட் சீர் ஆலோசனை நிறுவனம் தெரிவித்துள்ளது.₹ 83,000 கோடிக்கு விற்பனை நடைபெறும் என கணிக்கப்பட்டிருந்த நிலையில், அதை விட குறைவாகவே விற்பனையாகியுள்ளது. மேலும் ஆன்லைனில் கிட்டத்தட்ட 11.2 முதல் 12.5 கோடி பேர் பொருட்களை வாங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது