தஞ்சை நவ, 18
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் இருந்து திருக்கருகாவூர் வழியாக சாலியமங்களம் வரையிலான நெடுஞ்சாலையில் பல இடங்களில் குண்டு, குழி பள்ளங்கள் உருவாகி இருந்தன அதனால் வாகன ஓட்டிகள் தினசரி சிரமப்பட்டு வந்தனர். நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வந்தனர்.
இதனை அடுத்து சாலியமங்களத்தில் இருந்து பாபநாசம் வரையிலான சாலையை அகலப்படுத்தி புதுப்பிக்கும் பணி நடைபெற்றது இதனால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் சாலை புதுப்பிக்கும் பணிக்கு பாராட்டு தெரிவித்தனர்.