சென்னை நவ, 18
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான 2-ம் சுற்று கலந்தாய்வு தொடங்கியுள்ளது. இணைய வழியில் விண்ணப்ப பதிவை நாளை வரை மேற்கொள்ளலாம். நவம்பர், 20 முதல் விருப்பமான இடங்களை தேர்வு செய்யலாம் என மருத்துவ கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது. நவம்பர் 24 ம் தேதி முடிவுகள் வெளியிடப்படும். கூடுதல் விவரங்களுக்கு tnhealth, tn govt.in, thmedicalselection.net ஆகிய இணையதளங்களை தொடர்பு கொள்ளலாம்.