மதுரை நவ, 16
டி.என்.பி.எஸ்.சி விடைத்தாளை தமிழில் படித்தவரை மதிப்பீடு செய்யக் கூடிய வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் தமிழ் வழியில் படித்தவர் மட்டுமே விடைத்தாளை மதிப்பிட தகுதியானவராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆங்கில வழியில் பயின்றவர் தமிழராக இருந்தாலே சரியாக மதிப்பிடும் திறன் பெற்று இருக்கலாம் என்று தெரிவித்துள்ளது.