சீனா நவ, 18
உலகின் பல்வேறு நாடுகளை கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வந்துவிட்டாலும் சீனாவில் பாதிப்பு இன்னும் குறையவில்லை. இதனால் நாட்டின் பல நகரங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் ஜீரோ கோவிட் பாலிசி கட்டுப்பாடு அமலில் உள்ள நிலையில் சமீபத்தில் தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தை உயிரிழந்துள்ளது.
இதற்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காதே காரணம் என தெரியவந்துள்ளது. கொரோனாவின் தாக்கம் குறைந்து இருந்தாலும் சீனாவில் கொரோனாவின் பாதிப்புகள் சற்று ஓங்கியே இருக்கிறது என உலக ஆராய்ச்சி மையம் தகவல்கள் தெரிவிக்கின்றன.