மும்பை நவ, 17
மும்பையில் உள்ள ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆலையில் மீண்டும் பவுடர் தயாரிப்புக்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிர்ணயித்த அளவை விட வேதிப்பொருட்கள் அதிகமாக இருந்த புகாரில் ஆலையின் உரிமத்தை மாநில அரசு ரத்து செய்தது. இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் ஜான்சன் அண்ட் ஜான்சன் வழக்கு தொடுத்தது. பவுடரை வெவ்வேறு ஆய்வுகளில் மீண்டும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் அதுவரை உற்பத்திக்கு மட்டும் அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.