Spread the love

நாகப்பட்டினம் நவ, 15

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிறு வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் நோய் தொற்று பரவாமல் இருக்க மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் உத்தரவுபடியும், மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் விஜயகுமார் அறிவுரைபடியும், தலை ஞாயிறு வட்டார மருத்துவர் அலுவலர் தேவிஸ்ரீ வழிகாட்டுதல்படியும், வட்டார சுகாதாரத்துறை மேற்பார்வையாளர் நாகை.செல்வன் தலைமையில், அவரிக்காடு ஊராட்சி மன்ற தலைவர் லலிதா கலைச்செல்வன் முன்னிலையில் கொசுக்களை கட்டுப்படு த்தும் வகையில் கொசும ருந்து அடிக்கும் பணியை அவரிக்காட்டில் வட்டார வளர்ச்சி அலுவலர் செபஸ்தியம்மாள் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, சுகாதார ஆய்வாளர் மற்றும் களப்பணி யாளர் குழுக்களைக் கொண்டு, பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் தினசரி குறிப்பிட்ட விகிதத்தில் குளோரினேசன் செய்து வழங்கப்படுகிறதா? என ஆய்வு செய்யப்பட்டு குறைபாடுகள் இருப்பின் உடனடியாக குடிநீர் தொட்டி இயக்குபவர்களை கொண்டு குளோரினேசன் செய்யும் பணி துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், பருவமழை காலத்தில் ஏற்படும் நோய் பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில் சுகாதார ஆய்வாளர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் அடங்கிய விரைவு மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் உள்ளன என மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *