நாகப்பட்டினம் நவ, 12
வேதாரண்யம் சி.க.சு. அரசு மேல்நிலைப்பள்ளியில் வரைவு வாக்காளர் பட்டியலில் புதிதாக வாக்காளர் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல் தொடர்பான அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு மிதிவண்டி பேரணி நடைபெற்றது.
இப்பேரணியை வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், வேதாரண்யம் வருவாய் வட்டாட்சியர் ரவிச்சந்திரன், தேர்தல் துணை வட்டாட்சியர் ராஜா, வருவாய் ஆய்வாளர் மாதவன், கிராம நிர்வாக அலுவலர் உத்ராபதி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் நாகராஜன், அன்பழகன் மற்றும் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.