கீழக்கரை நவ, 14
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில், “நம்ம கீழக்கரை வெல்ஃபேர் கமிட்டி”யின் இரண்டாம் கட்ட ஆலோசனை கூட்டம் நேற்று மாலை மேலத்தெரு வெள்ளை மாளிகை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இதில் கமிட்டியின் மூத்த உறுப்பினர்களான சீனா தானா(எ) அல்ஹாஜ் செய்யது அப்துல் காதர், கிழக்குத்தெரு ஜமாத் தலைவர் பானா ஆனா சேகு அபுபக்கர் சாஹிப், வடக்குத்தெரு ஜமாத் தலைவர் அல்ஹாஜ் ரத்தின முகம்மது ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.கீழக்கரையின் அனைத்து ஜமாஅத் மற்றும் பல்வேறு சமூக நல அமைப்பை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கண்ணாடி வாப்பா அறக்கட்டளைக்கு கோரிக்கையாக,
கீழக்கரை நகர் பகுதிக்குள் பொதுமக்களுக்கான இலவச வாகன சேவை ஏற்பாடு செய்து கொடுப்பது, ஏழை எளிய மக்களுக்கு தினமும் இலவசமாக பகல் உணவு வழங்கப்படுவதென்றும் அதனை கோரிக்கை வைத்த ஜமா அத்துகள் மூலம் விநியோகம் செய்வது, ஏழை எளிய மக்களின் ஜனாஸா நல்லடக்கம் மற்றும் கத்னா(சுன்னத்) செலவுக்கான நிதி வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்களை கண்ணாடி வாப்பா அறக்கட்டளையிடம் கோரிக்கையாக வைக்கப்பட்டது.
இந்த கோரிக்கைகளின் முதல் கட்டமாக இன்று காலை கீழக்கரை நடுத்தெரு ஜும் ஆ பள்ளியில் இருந்து கீழக்கரை மின் வாரிய அலுவலகம் வரைக்குமான பெண்களுக்குரிய இலவச வாகன சேவை இயக்குவதாக கண்ணாடி வாப்பா அறக்கட்டளை நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, கீழக்கரை வெல்ஃபேர் கமிட்டியின் செயலாளராக சித்தீக், இணை செயலாளராக மூர் ஹஸனுதீன், பொருளாளராக மின்ஹாஜ் பள்ளி ஜமா அத் தலைவர் ஹாஜி சாகுல் ஹமீது பாக்கவி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும் மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் M.K.E உமர், தெற்குத்தெரு ஜமாத் தலைவர் அல்ஹாஜ் உமர் களஞ்சியம், செயலாளர் செய்யது இப்றாகீம், பழைய குத்பா பள்ளி ஜமாத் செயலாளர் மூர் ஜெய்னுதீன், பொருளாளர் ஹாஜா ஜலாலுதீன், கடற்கரை பள்ளி ஜமாத் செயலாளர் ஹமீது ஆஸ்கீன், நகர்மன்ற துணை தலைவர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான், மேலத்தெரு T.A.S நசீர், P.S.L நசீர், செய்யது அப்துல் காதர், ஜின்னா தெரு ஹஸனாத் பள்ளி தலைவர் ஷஃபீக், சுன்னத் ஜமாத் அறக்கட்டளை செயலாளர் ஹாஜா முகைதீன் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை கூறினர்.
இக்கூட்டத்தில் அனைத்து ஜமாத் மற்றும் அனைத்து தெருவை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஜஹாங்கீர்
தாலுகா நிருபர்.
கீழக்கரை செய்திப் பிரிவு.