ராமநாதபுரம் நவ, 12
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புலியை சுற்றி சுமார் 500க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் சென்னை செல்ல 25 கிலோமீட்டர் தூரமுள்ள ராமநாதபுரம் ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்ல வேண்டி உள்ளது.
எனவே பொதுமக்கள் நலன் கருதி உச்சப்புள்ளி ரயில் நிலையத்தில் முன்பதிவு எக்ஸ்பிரஸ் ரயிலை ஐந்து நிமிடம் நிறுத்த தென்னக ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் நாகேஷ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.