திருவண்ணாமலை நவ, 13
தமிழக காவல் துறையில் புதிதாக ‘ஸ்மார்ட் காவலர் இ- பீட்’ முறையானது அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த புதிய முறையானது, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 7 காவல் உட்கோட்டங்களில் தலா ஒரு காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி திருவண்ணாமலை டவுன், தண்டராம்பட்டு, போளூர், வந்தவாசி, செய்யாறு, செங்கம், ஆரணி டவுன் ஆகிய காவல் நிலையங்களில் நேற்று மாலை 5 மணி முதல் ஸ்மார்ட் காவலர் செயலி மூலம் இ- பீட் முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. குற்றம் நடைபெறமால் தடுக்க ரோந்து செல்லும் காவல் துறையினரின் தொடர் கண்காணிப்பை உறுதிப்படுத்த காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், புதிதாக செல்போன் செயலியை அறிமுகப்படுத்தி தொடங்கி வைத்தார்.