திருவண்ணாமலை நவ, 11
ஆரணி அடுத்த அருகே ராட்டினமங்கலம் கிராமத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் இயங்கி வருகின்றன.
இதனால் குடியிருப்பு பகுதியில் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்படுகின்றது. மேலும் இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகம் ஊராட்சி மற்றும் மாசுகட்டுபாட்டு வாரியம் ஆகிய நிர்வாகத்திற்கு பலமுறை மனு அளித்தோம் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ராட்டினமங்கலம் பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்டோர் அரிசி ஆலைகளில் இருந்து வரும் கரும்புகை துகள்களை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என கூறி ஆரணி ராட்டினமங்கலம் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதன் எதிரொலியாக மாவட்ட சுற்றுசூழல் மற்றும் மாசுக் கட்டுபாடு வாரிய இணை இயக்குநர் கதிர்வேல் தலைமையில் அதிகாரிகள் ஆரணி அருகே ராட்டினமங்கலம் கிராமத்தில் உள்ள அரிசி ஆலைகளில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். இதில் கருப்புகை தூசிகள் உள்ளிட்ட பிரச்சினைகள் வருகின்றதா மற்றும் மாசுகட்டுப்பாடுவாரிய விதித்த விதிமுறை களை பின்பற்றுகின்றதா என பல்வேறு கோணத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.