Spread the love

கோயம்புத்தூர் நவ, 13

பொள்ளாச்சி பகுதியில் விடிய, விடிய பலத்த மழை பெய்தது. பலத்த மழை கடந்த ஜூன் மாதம் பெய்ய தொடங்கிய தென்மேற்கு பருவமழையால் பொள்ளாச்சி பகுதியில் உள்ள அணைகள், ஆறுகள் நிரம்பின. இதற்கிடையில் வடகிழக்கு பருவமழை வலுவடைந்து தீவிரமாக பெய்து வருகிறது. இந்த நிலையில் தென்மேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பொள்ளாச்சியில் நேற்று முன்தினம் மாலை பெய்ய தொடங்கிய மழை, விடிய, விடிய கொட்டி தீர்த்தது. மேலும் நேற்று விடாது மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் வெளியிடங்களுக்கு சென்ற பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தப்படியும், குடைகளை பிடித்தப்படி சென்றனர். இதற்கிடையில் மழை தொடர்ந்து பெய்ததால் கடும் குளிர் நிலவியதால், பலர் தங்களது வீடுகளிலேயே முடங்கினர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மேலும் பி.ஏ.பி. திட்டத்தில் உள்ள சோலையாறு, பரம்பிக்குளம், ஆழியாறு அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. கிணத்துக்கடவு, நெகமம் கிணத்துக்கடவு பகுதியில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். தொடர்மழையால் நேற்று கிணத்துக்கடவு வாரசந்தைக்கு வந்த வியாபாரிகள், பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். நெகமம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

இதன் காரணமாக குளம், குட்டைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. தொடர்மழையின் காரணமாக நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *