திருப்பத்தூர் நவ, 11
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் அடிப்படை வசதிகள் செய்ய ரூ.5 கோடியே 20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் தலைவர் தெரிவித்தார். மாவட்ட ஊராட்சி கூட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டம், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் சூரியகுமார் தலைமையில் நடைபெற்றது. ஊராட்சிகள் உதவி இயக்குனர் விஜயகுமாரி முன்னிலை வகித்தார்.
புதுப்பேட்டை ரோடு ரயில்வே மேம்பாலம் அருகே அருங்காட்சியம், மாவட்ட நூலகம், மாவட்ட அலுவலர்களுக்கான குடியிருப்புகள் கட்ட திட்டம் தயாரிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ரயில்வே நிர்வாகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. ஒப்புதல் வந்தவுடன் ரூ.5 கோடி செலவில் புதிய மாவட்ட ஊராட்சி குழு அலுவலகம் அங்கு கட்டப்பட உள்ளது என கூறினார்.