கடலூர் நவ, 11
கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் பொருளாதார மேம்பாட்டுத்திட்டங்களின் கீழ் நிலமற்ற விவசாய தொழிலாளர்கள் வேளாண் நிலம் வாங்க சந்தை மதிப்பில் ரூ.5 லட்சம் வரை மானியத்துடன் கூடிய கடன் பெற நிலம் வாங்கும் திட்டத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு நிலம் வாங்க கடலூர் மாவட்டத்திற்கு 2022-23-ம் நிதியாண்டிற்கு மொத்த இலக்கு எண்ணிக்கை 10 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில் 9 நபர்கள் ஆதிதிராவிடர்களுக்கும் மற்றும் 1 நபர் பழங்குடியினருக்கும் தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.50 லட்சம் மானியம் ஒதுக்கீடு செய்து அரசு ஆணையிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற ஆதிதிராவிடர் http://application.tahdco.com என்ற இணையதள முகவரியிலும் மற்றும் பழங்குடியினர் http://fast.tahdco.com என்ற இணையதள முகவரியிலும் பதிவு செய்து இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.