சென்னை நவ, 9
சுகாதாரத்துறை காலியாக உள்ள அலுவலர்களுக்கு பணியிடங்களுக்கான கணினி வழித்தேர்வு 2023 பிப்., 13 ம் தேதி நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. எம்.பி.பி.எஸ் பட்டத்துடன் பொது சுகாதாரத்தில் டிப்ளமோ முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.56,900 முதல் ரூ.2,09,200 விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 19. மேலும் விவரங்களுக்கு (tnpsc.gov.in, apply.tnpscexams.in) என்ற இணையதளத்தில் விபரங்கள் தெரிந்து கொள்ளலாம்.