கள்ளக்குறிச்சி நவ, 8
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்காதிருநாவலூர் சராகத்துக்குட்பட்ட திருநாவலூர் ஆய்வாளர் அசோகன் தலைமையில் துணை ஆய்வாளர்கள் பிரபாகரன் மணிமேகலை தனிப்பிரிவு காவல் துறையினர் மனோகரன் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது கொரட்டங்குறிச்சி கிராமத்தில் சிலர் பணம் வைத்து சூதாடினர். அங்கு விரைந்த போலீ சார் மடக்கி பிடித்து அனை வரையும் கைதுசெய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த சாரங்கன், மணிகண்டன், செல்வம், முருகன், ராஜா, சிவனேசன் சிவராமன், குணா, பாபு, ஏழுமலை என தெரிய வந்தது. அவர்க னளிடம் இருந்து சூதாட்ட பணம் ரூ. 5000 பறிமுதல் செய்தனர். அவர்கள் 11 பேரையும் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.