Spread the love

ராமநாதபுரம் நவ, 8

ராமநாதபுரம் மாவட்ட சதுரங்க சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான 17 வது சதுரங்க போட்டி முஹமது சதக் தஸ்தகீர் கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் முன்னாள் தலைவர் அப்பா மெடிக்கல் Dr. சுந்தரம் தலைமை வகித்தார். செஞ்சிலுவை சங்கம்
சதுரங்க சங்க துணைத்தலைவர் தேவி உலகராஜ், முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ரமேஷ் வரவேற்றார். ராமநாதபுரம் நகராட்சி தலைவர் கார்மேகம் இப்போட்டியினை தொடங்கி வைத்தார்.

மேலும் ரோட்டரி உதவி ஆளுநர் செந்தில்குமார், கோரல் ரோட்டரி சங்கத் தலைவர் சோமசுந்தரம், செயலாளர் ராஜேஷ், பட்டயத்தலைவர் ராஜா, செஞ்சிலுவை சங்க சட்ட ஆலோசகர் காளீஸ்வரன், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆறு பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டிகளில் 7, 9, 11, 13, 15 வயதிற்குட்பட்டோர் மற்றும் பொது பிரிவில் 21 வயதிற்குட்பட்ட ஆடவர், மகளிர் கலந்து கொண்டனர். 5 சுற்றுகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு
மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வசந்தி, அரசு விளையாட்டு விடுதி மேலாளர் தினேஷ்குமார், செய்யது அம்மாள் கலை கல்லூரி பேராசிரியர் வள்ளி விநாயகம், முஹமது சதக் தஸ்தகீர் கல்வியியல் கல்லூரி முதல்வர் சோமசுந்தரம் ஆகியோர் பரிசுக் கோப்பை, சான்றிதழ் வழங்கி கௌரவித்தனர்.

இந்நிகழ்வில் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ராஜன், பாலமுருகன், சாலமன் ரெத்தின சேகரன், திரவிய சிங்கம், ஜோன்ஸ் கீதா மலைக்கண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிவில் பொருளாளர் குணசேகரன் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *