கீழக்கரை நவ, 7
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில், மேலத்தெரு மக்கள் சேவை அறக்கட்டளையின் சார்பில் அரசு மருத்துவமனைக்கு 10-1/2 (பத்தரை கிலோ) கொள்ளளவு கொண்ட சலவை இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் M.K.E.உமர் சலவை இயந்திரத்தை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் முன்னிலையில் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ஜவாஹிர் ஹுசைனிடம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா, துணைத் தலைவர் ஹமீது சுல்த்தான், மாணவரணி அமைப்பாளர் இப்திஹார் ஹசன், நகர்மன்ற உறுப்பினர்கள் மூர் நவாஸ்,மீரான் அலி, சுஐபு, பயாஸ்தீன் மற்றும் கீழை ஜஹாங்கீர் அரூஸி, நகர் திமுக செயலாளர் பஷீர் அகமது, மூர் ஹஸனுதீன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
ஜஹாங்கீர் அரூஸி.
தாலுகா நிருபர்.கீழக்கரை.