ராமநாதபுரம் நவ, 8
ராமநாதபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் சார்பில் பெண்களுக்கு இலவச எம்பிராய்டிங் மற்றும் இலவச தையல் பயிற்சி வகுப்பு வருகின்ற நவம்பர் 11ல் துவங்குகிறது. பயிற்சி முடிவில் அரசு சான்றிதழ், வங்கி கடன் பெற ஆலோசனைகள் வழங்கப்படும். தையல் தெரிந்த பெண்கள் மட்டும் நவம்பர் 10ம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும் என மைய இயக்குனர் கலைச்செல்வன் தெரிவித்துள்ளார்.