கர்நாடகா நவ, 5
கர்நாடகாவில் பிரசவத்திற்காக அரசு மருத்துவமனைக்கு சென்ற பெண் ஆதார் அட்டை இல்லை என திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். வீடு சேர்ந்த போது அவர் உயிரிழந்தார். மருத்துவமனையை பார்வையிட்ட மருத்துவ அமைச்சர், விசாரிக்க குழு ஒன்றை அமைத்து காரணமான ஊழியர்களை பணி நீக்கம் செய்தார். இந்நிலையில் இறந்த தாயின் ஆறு வயது பெண் குழந்தை மேஜர் ஆகும் வரை அனைத்து உதவிகளையும் வழங்க மாவட்ட அதிகாரிகளுக்கு மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது.