சென்னை ஆகஸ்ட், 5
சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் என 47 இடங்களில் சோதனை நடக்கிறது. பல இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகளும், சில இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகளும் சோதனை நடத்தினர்.
சென்னையில் இன்டர்நேஷனல் பைனான்ஸ் சர்வீஸ் என்ற நிறுவனத்திற்கு தொடர்புடைய 21 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த நிறுவனம், ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால், மாதந்தோறும் ரூ.8 ஆயிரம் கொடுப்பதாக கூறி பலரிடம் பணம் வசூலித்து மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
மேலும் சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக கட்டுமான உரிமையாளர் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
மேலும் செய்திகளை உடனே படிக்க…
http://www.vanakambharatham24x7news.in