கடலூர் நவ, 4,
பண்ருட்டி, திட்டப்பணிகளை ஆய்வு பண்ருட்டி வட்டார பகுதியில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மற்றும் பல்வேறு துறைகளின் திட்டப்பணிகள் குறித்து நேற்று முன்தினம் கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் ஆய்வு செய்தார்.
அப்போது அவர் பண்ருட்டி வட்டார மகளிர் வாழ்வாதார சேவை மையத்தின் செயல்பாடுகள் குறித்து தொழில் முனைவு மேம்பாட்டு அலுவலர் மற்றும் தொழில் முனைவு நிதி அலுவலரிடம் கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து 32 முந்திரி உற்பத்தியாளர் குழுக்களை ஒருங்கிணைத்து பணிக்கன்குப்பத்தில் அமைக்கப்பட்டுள்ள பண்ருட்டி முந்திரி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை பார்வையிட்டார்.
பின்னர் அதன் நிர்வாகிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம், தொடர்ந்து அரசு விதை உரிமம் பெற்ற, தனியார் விதை விற்பனை நிலையங்களை ஆய்வு செய்த ஆட்சியர் விவசாயிகளுக்கு விதை விற்பனை செய்ய வேண்டிய நடைமுறைகள் குறித்து விளக்கி கூறினார்.
மேலும் கடைகளில் காலாவதியான விதைகள் விற்றாலோ அல்லது உரிமம் பெறாமல் விற்பனை செய்தாலோ சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என விற்பனையாளர்களை எச்சரித்தார். அப்போது அவருடன் பல்வேறு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.