துபாய் அக், 31
ஐக்கிய அரபு அமீரக ஷார்ஜாவில் கிரீன் குளோப் நிறுவனம் அல் ஹுதா குழந்தைகள் திறன் மேம்பாட்டு மையம் (சுலோக்சனா வீரகுமார்) மற்றும் அல் ரீம் மருத்துவ மற்றும் நோயறிதல் மையம் ஆகியவற்றின் ஆதரவுடன் ஷார்ஜா அல் புத்தீனா லுலு சென்டரில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி க்ரீன் குளோப் நிறுவனத்தின் நிறுவனர் முனைவர் ஜாஸ்மீன் தலைமையில் அல்மாஷா ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு கௌரவ விருந்தினராக டாக்டர் ஹுசைஃபா இப்ராஹிம், மெஜஸ்டிக் இன்வெஸ்ட்மென்ட் சிஇஓ டாக்டர் கபீர், ஐபிஜி நிறுவனர் தலைவர் டாக்டர் அன்வர் அலி, துபாய் ஈமான் பொதுச் செயலாளர் ஹமீது யாசின் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் சிறப்பு விருந்தினராக டாக்டர். லக்ஷ்மி விஸ்வநாத், பூஜா சுதா கதுரியா, ஷிரீன் ஜாப்ரி, ஃபேஷன் டிசைனர் சூசன் மண்டோஷ், அருண் மோகன், தமிழ் தேசிய நாளிதழின் மூத்த நிருபர் நஜீம் மரிக்கா, கேப்டன் டிவி மூத்த நிருபர் கே.வி.எல்.கமால், மக்கள் ஆர்.ஜே.சாரா ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில்
லக்ஷ்மி விஸ்வநாத் (மூத்த மகளிர் மருத்துவ நிபுணர் – அல் ரீம் மருத்துவமனை) மார்பக புற்றுநோய் பற்றி விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தையும், ஆரம்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துரைத்தார்.
மேலும் அல்ரீம் மருத்துவமனையின் பொது மருத்துவர் ரீனு பாபு மார்பகப் புற்றுநோய் அறிகுறிகள் மற்றும் எவ்வாறு சுயமாக கண்டறிதல் என்பது பற்றி விரிவாக விளக்கினார். குழந்தைகளால் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் முக்கிய நிகழ்வாக கீமோ நோயாளிக்கு 4 இளம்பெண்கள் தனது தலைமுடியை தானமாக வழங்கியது நிகழ்வின் சிறப்பம்சமாகும்.
இந்நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைப்பாளர்களாக சமீர், எஸ்பிஎஸ் நிஜாம், கமால், அஸ்லம், மீடியா அஸ்கர், தன்னார்வலர்களாக நபாஹ் அல் எமராத் குழுவினர் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.
நிகழ்ச்சி முடிவில்,மார்பக புற்றுநோயானது பெண்களில் மிகவும் கண்டறியப்பட்ட புற்றுநோயாகும், மேலும் இது பெண்களிடையே மரணத்திற்கு இரண்டாவது முக்கிய காரணமாகும். இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே முக்கிய முயற்சியாக இருந்தது. இது ஒரு வெற்றிகரமான நிகழ்வாக இருந்ததில் பெருமிதம் கொள்கிறோம் என்று அமைப்பின் நிறுவனர் முனைவர் ஜாஸ்மீன் கூறி நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்தார்.
நஜீம் மரைக்கா.
முதன்மை செய்தியாளர்.
அமீரக செய்திப் பிரிவு.