மதுரை அக், 29
வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு மதுரை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அதன்படி கடந்த ஜனவரி முதல் அக்டோபர் 26 ம்தேதி வரை துபாய், சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து 63 ஆயிரத்து 766 பயணிகள் வந்திருந்தனர். அவர்களின் உடல் வெப்பநிலை அடிப்படையில் 2 ஆயிரத்து 46 பேருக்கு சுகாதாரத்துறை சார்பில் வலையங்குளம் வட்டார மருத்துவ அலுவலர் தனசேகரன் தலைமையிலான மருத்துவர்கள் கொரோனா பரிசோதனை செய்தனர்.
இதில் கொரோனா தொற்று அபாயம் இல்லாத நாடுகளில் இருந்த வந்த 30 பயணிகள் மற்றும் கொரோனா தொற்று பரவும் அபாயகரமான நாடுகளில் இருந்து வந்த 1 பயணி என மொத்தம் 31 பயணிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டது. தொடர்ந்து மதுரை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளை சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருவதாக மதுரை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அர்ஜூன்குமார் தெரிவித்துள்ளார்.