தஞ்சாவூர் அக், 27
கும்பகோணம் அருகே சோழபுரம் பேரூராட்சி, மகாராஜபுரம் ஊராட்சியில் உள்ள பனங்குடம் கிராமத்தில் வசிக்கும் 31 குடும்பங்களை சேர்ந்த 105 இருளர், பழங்குடி இன மக்களுக்கு சாதி சான்றிதழ்களை தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று வீடு, வீடாக சென்று வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் லதா, திருவிடைமருதூர் தாசில்தார் சுசீலா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பூங்குழலி, சூரிய நாராயணன், ஊராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரி இளங்கோவன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.