மும்பை அக், 26
கந்தகோட்டை, தகராறு, கொடிவீரன், அடங்க மறு, காப்பான் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பூர்ணா. திருமணம் குறித்த வதந்திக்கு நடிகை பூர்ணா ஒரு புகைப்படத்தின் மூலம் பதிலடி கொடுத்துள்ளார். தமிழில் ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பூர்ணா. அதன்பின்னர் கந்தகோட்டை, தகராறு, கொடிவீரன், அடங்க மறு, காப்பான் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார். தமிழ், மலையாளம், தெலுங்கு மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் பூர்ணா- ஷானித் ஆசிப் அலியை இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்துள்ளார். தனது திருமணம் தொடர்பான புகைப்படங்களை சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.