நாகப்பட்டினம் அக், 22
நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம் மிகவும் சிதிலமடைந்து காணப்பட்டது. இதனால் அங்கு வந்து செல்லும் பயணிகள் மிகுந்த சிரமங்களை சந்தித்தனர். எனவே, அதை சீரமைக்க வேண்டும் என்று நீண்டகாலமாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், மூலதன மானிய நிதியிலிருந்து ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, நாகை பேருந்து நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் நடந்து வருகின்றன. பேருந்து நிலையத்திலுள்ள கட்டிடத்தின் மேல் தளத்தில் தட்டு ஓடு பதித்தல், நடைபாதையில் டைல்ஸ் மற்றும் பேவர் பிளாக் அமைத்தல், தார்ச்சாலை அமைத்தல், சாலையோர வியாபாரிகளுக்கு கடைகள் கட்டுதல், புதிய மின்விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருவதை நாகை சட்ட மன்ற உறுப்பினர் முகம்மது ஷா நவாஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது, நாகை நகராட்சி ஆணையர், செயற் பொறியாளர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.