நாகப்பட்டினம் அக், 21
கீழ்வேளூர் ஒன்றியம் கொடியாலத்தூர் ஊராட்சியில் புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் கவுதமன், நாகை சட்ட மன்ற உறுப்பினர் மாலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சித் தலைவர் ரேவதி அய்யப்பன் வரவேற்றார்.
மேலும் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.28.94 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஆட்சியர் அருண் தம்புராஜ் குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.