அரியலூர் அக், 22
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரியலூர் மாவட்டத்திற்கு வருகிற 5 ம் தேதி வருகிறார். இதையொட்டி, அரியலூர் மாவட்டம், கொல்லாபுரத்தில் விழா நடைபெறும் இடத்தினை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில், மாவட்ட ஆட்சியர்கள் ரமண சரஸ்வதி ஸ்ரீவெங்கட பிரியா, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பெரோஸ்கான் அப்துல்லா, மணி, மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.