சென்னை அக், 21
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னையில் இன்று நடக்கும் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி-கோவா அணிகள் மோதுகின்றன.
11 அணிகள் இடையிலான 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கொச்சி, பெங்களூரு, கொல்கத்தா, சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் ‘டாப்-6’ இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றை எட்டும். இந்த தொடரில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி, எப்.சி. கோவாவை எதிர்கொள்கிறது.