கள்ளக்குறிச்சி அக், 20
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் பணி நீக்கம் செய்யப்பட்ட 28 ஊழியர்கள், தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 19 நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று இவர்கள் கைகளில் அகல் விளக்கு ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக சுங்கச்சாவடி பணியாளர்களும் பங்கேற்றார்கள்.