அரியலூர் அக், 20
அரியலூர் சிறப்பு பஸ்கள் தீபாவளி பண்டிகையையொட்டி கும்பகோணம் கோட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் பொதுமக்கள் எளிதாகவும், எவ்வித சிரமமும் இன்றி பயணம் செய்ய ஏதுவாக சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்படவுள்ளது.
அதன்படி சென்னையில் இருந்து கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால் வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலூர், ஜெயங்கொண்டம், கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம், மதுரை ஆகிய இடங்களுக்கும் நாளை முதல் வருகிற 23 ம்தேதி வரையிலும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளது.
மேலும் தீபாவளி பண்டிகை முடித்து அவரவர்கள் வேலைக்கு திரும்புவதற்கும் சிறப்பு அரசு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.