Spread the love

சென்னை அக், 20

57 வயதான பப்லு பிரித்விராஜ் சினிமா மற்றும் டெலிவிஷன் தொடர்களில் நடித்து பிரபலமானவர். ‘வாரணம் ஆயிரம்’, ‘பயணம்’, ‘பாண்டிய நாட்டு தங்கம்’, ‘சிகரம்’, ‘அழகன்’ உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். இவருக்கு பீனா என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர்.

இவருடைய மகன் ஆட்டிசம் குறைபாடு உடையவர். இதனால் பப்லு மன உளைச்சலில் இருந்தார். அதே நேரம் மகனையும் கவனித்து வந்தார். இது தொடர்பாக அவரது மனைவியுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நடிகர் பப்லு மலேசியாவைச் சேர்ந்த 23 வயது பெண்ணை சில மாதங்களுக்கு முன்பு இரண்டாவது திருமணம் செய்து கொண்டு அவருடன் வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *