தஞ்சாவூர் அக், 19
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக கொள்ளிடத்தில் நீர்வரத்து அதிகமாக உள்ளது. இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் கல்லணையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் விஜயகுமார் தலைமையில் நீர்வளத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலை வகித்தார்.
மேலும் காவிரி மற்றும் கொள்ளிடக் கரையோரங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், கால்நடைகளை பாதுகாப்பாக வைத்திருக்குமாறும் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி அறிவுறுத்தினார்.
அப்போது கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா, வருவாய் கோட்டாட்சியர் லதா, காவிரி கோட்ட செயற்பொறியாளர் இளங்கோ, உதவி செயற்பொறியாளர் அய்யம்பெருமாள், உதவி பொறியாளர்கள் பூங்கொடி, ராஜ்குமார், வட்டாச்சியர் வெங்கடேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.