திருவண்ணாமலை அக், 17
மாவட்ட தடகள சங்கம் மற்றும் அருணை மருத்துவ கல்லூரி மருத்துவமனை சார்பில் 36-வது மாநில இளையோர் தடகள போட்டி திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் தொடங்கியது.
இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலை மாவட்ட தடகள சங்க தலைவரும், மாநில துணைத்தலைவருமான கம்பன் தலைமை தாங்கினார். மாநில தடகள சங்க செயலாளர் லதா, சுகாதார துறை துணை இயக்குனர் செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தடகள சங்க செயலாளர் புகழேந்தி வரவேற்றார்.
மேலும் சிறப்பு விருந்தினராக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் மற்றும் துணை சபாநாயகர் பிச்சாண்டி, ஆட்சியர் முருகேஷ் ஆகியோர் கலந்துகொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தனர்.