Spread the love

திருவண்ணாமலை அக், 16

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் வேங்கிக்கால் ஏரி உள்ளது. கடந்த ஆண்டு பெய்த மழையின் போது இந்த ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறியது. அப்போது நீர்வரத்து கால்வாய்கள் தூர்வாராததால் மழைநீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்தனர். அதனை கருத்தில் கொண்டு மழைகாலம் தொடங்குவதற்கு முன்பு வேங்கிக்கால் ஏரியில் இருந்து உபரிநீர் செல்லும் சேரியந்தல் ஏரி, நொச்சிமலை ஏரி, கீழ்நாத்தூர் ஏரி ஆகியவற்றின் நீர்வரத்து கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் நெடுஞ்சாலைத்துறைக்கு உட்பட்ட பகுதிகள் வழியாக இந்த ஏரிகளின் கால்வாய்கள் செல்லும் பகுதியில் பக்க கால்வாய்கள், சிறுபாலங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று வேங்கிக்கால் ஏரியில் இருந்து உபரி நீர் செல்லும் சேரியந்தல் ஏரி, நொச்சிமலை ஏரி, கீழ்நாத்தூர் ஏரி ஆகியவற்றின் நீர்வரத்து கால்வாய் செல்லும் பாதையை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் இந்த ஆய்வின் போது நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முரளி, உதவி கோட்ட பொறியாளர் ரகுராமன், உதவி பொறியாளர் கலைமணி, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் ராமகிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர் சிவக்குமார், உதவி ஆட்சியர் வெற்றிவேல், வட்டாட்சியர் சுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மரியதேவ்ஆனந்த், பரமேஸ்வரன் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *